சுடச்சுட

  

  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம்: ஞானதேசிகன் தில்லி பயணம்

  By dn  |   Published on : 18th March 2014 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gnadesikan

  தமிழகத்துக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் திங்கள்கிழமை தில்லி சென்றுள்ளார்.

  தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 39 தொகுதிகளுக்கும் சுமார் 1,000 பேர் விருப்ப மனு அளித்தனர்.

  அதிலிருந்து தொகுதிக்கு 4 முதல் 10 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு குலாம்நபி ஆசாத் தலைமையிலான வேட்பாளர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து தொகுதிக்கு 1 முதல் 4 பேரை கொண்ட பரிந்துரைப் பட்டியலை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவுக்கு குலாம்நபி ஆசாத் அனுப்பியுள்ளார்.

  இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து சோனியா காந்தி தலைமையில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

  தனித்துப் போட்டி என்பதால் மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகளை அனுபவித்தவர்களும், தற்போதைய எம்.பி.க்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கண்டிப்புடன் கூறியுள்ளனர். ஆனாலும், பலர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் நிறுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திங்கள்கிழமை காலை தில்லி சென்றார். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அவரை மேலிடம் அழைத்துள்ளது.வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதுடன் சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் தேதியும் முடிவு செய்யப்படும் என ஞானதேசிகன் தெரிவித்தார்.

  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) அல்லது புதன்கிழமை (மார்ச் 19) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai