சுடச்சுட

    

    சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கம்

    By dn  |   Published on : 18th March 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karuna1

    சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்து நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை முற்றிலுமாகத் தடைசெய்வதற்குப் பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறியுள்ளது.

    ஆனால், அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக வாக்ககளித்தது என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

    2011 நவம்பரில் நான் வெளியிட்ட அறிக்கையில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது மிகவும் ஆபத்தானது என்று அறிக்கை விடுத்தேன்.

    அன்னிய முதலீட்டுக்கு எதிராக 2012 செப்டம்பரில் வேலைநிறுத்த போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று அறிவித்தேன்.

    இதன் பிறகு 2012 நவம்பரில், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னையில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது, அன்னிய முதலீடு தொடர்பாக விவகாரங்களை விளக்கினார்.

    அதன் பிறகு நான் வெளியிட்ட அறிக்கையில், "அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாநில அரசை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறியிருப்பதால், தமிழகத்துக்கும் வணிகர்களுக்கும் எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை. எனவே, அன்னிய முதலீடு தொடர்பாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உடனடியாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட்டால், அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை எண்ணிப் பார்த்து, இந்தப் பிரச்னையில் ஆதரவு தருகிறோம்' என்று கூறினோம்.

    ஆனால் திமுக கூறிய காரணங்களை அப்படியே மறைத்துவிட்டு, திமுகவைக் குற்றம்சாட்டி தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியுள்ளார்

    திமுகவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஜெயலலிதா படித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

    பிரசாரத்துக்காக அதன் மீது குறை சொன்னாலும் மனதளவில் திமுகவின் தேர்தல் அறிக்கையை அவர் பாராட்டவே செய்வார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai