சுடச்சுட

  

  சூரிய சக்தியில் இயங்கும் பைக்: பொறியியல் மாணவர்கள் சாதனை

  By dn  |   Published on : 18th March 2014 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  klm17bike

  குமரி மாவட்டம், மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூரிய சக்தியில் இயங்கும் பைக்கை உருவாக்கி, சாதனை படைத்துள்ளனர்.

   நாரயணகுரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்கள் நந்து ஸ்ரீதர், ஜெயபிரசாத், மனீஷ், திலிப் ஆர். நாயர் ஆகிய மாணவர்கள், துறைத் தலைவர் அஜிதா பிரியதர்ஷினி மற்றும் துணைப்  பேராசிரியர் எஸ்.வி. திஷோரின் ஆகியோரின் வழிகாட்டுதலில், இந்த சூரிய சக்தி மோட்டார் பைக்கை உருவாக்கியுள்ளனர்.

  இது குறித்து, இம்மாணவர்கள் திங்கள்கிழமை கூறியதாவது: சூரிய சக்தியில் இயங்கும் இந்த மோட்டார் பைக்கில், 4 சூரிய மின்சக்தி தகடுகளை இணைத்துள்ளோம். இந்த தகடுகள் மூலம் இதிலுள்ள பேட்டரியில் சேமிக்கப்படும் முழு அளவு மின்சக்தி மூலம் இந்த பைக்கை 60 கீ.மீ., தூரம் வரை ஓட்ட முடியும். மேலும் பைக் ஓடிக்கொண்டிருக்கும் போதும் பேட்டரி சார்ஜ் ஆகும்.

  பைக்கை ஓட்டவில்லையெனில், இதிலுள்ள மின்சாரத்தை வீட்டுத் தேவைகளுக்கும்  பயன்படுத்திக் கொள்ளலாம். சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கைத் தயாரிக்க ரூ. 30 ஆயிரம் செலவாகியுள்ளது. இந்த பைக்கில், பெட்ரோல் போன்ற திரவ எரிபொருள் பயன்படுத்தப்படாததால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தாகவும் உள்ளது என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai