சுடச்சுட

    

    திமுகவில் இருந்து விலகக் கூடாது: அழகிரி ஆதரவாளர்கள் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 18th March 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுகவில் இருந்து விலகக் கூடாது என்று மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் வலியுறுத்திப் பேசினர்.

    மதுரை டிவிஎஸ் நகர் தயா மகால் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். மகளிர் அணியினர், அழகிரிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். வழக்கமான ஆரவாரத்துடன் கூட்டம் நடந்தாலும், எந்த பகுதியிலும் திமுக கொடியை காண முடியவில்லை.

    ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, செüந்தரபாண்டியன், பெரியகுளம் முன்னாள் எம்.பி. ஞானகுருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய ஆதரவாளர்கள் பலரும், திமுகவை விட்டு வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தினர். நம்மை பிடிக்காதவர்கள் வேண்டுமானால், கட்சியைவிட்டு வெளியேற வேண்டும். திமுகவையும், கருணாநிதியையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டனர். ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள், அழகிரி திமுகவை விட்டு விலகக் கூடாது என்று வலியுறுத்தினர்.

     ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ் பேசும்போது, இந்த கூட்டத்துக்கு ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 2 நிர்வாகிகள் மட்டும் வந்தால்போதும் என்று அழகிரி கூறியிருந்தார். ஆனால், அதையும் மீறி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்திருக்கின்றனர் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai