சுடச்சுட

  
  tut17dmk

  திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக பஸ் கட்டணத்தை ஒரு பைசாகூட உயர்த்தியது இல்லை என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து ஸ்டாலின் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். செய்துங்கநல்லூரில் அவர் பேசியது: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்கும் நிலையில் மக்களுக்கு எந்தத் திட்டத்தையாவது தந்துள்ளார் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது.

  செய்துங்கநல்லூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்ல திமுக ஆட்சியில் ரூ.7-ஆக இருந்த கட்டணம் தற்போது அதிமுக ஆட்சியில் ரூ.12-ஆக உயர்ந்துள்ளது. செய்துங்கநல்லூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்ல திமுக  ஆட்சியில் ரூ.18 ஆக இருந்த கட்டணம், அதிமுக ஆட்சியில் ரூ.25ஆக உயர்ந்துள்ளது. செய்துங்கநல்லூரிலிருந்து திருச்செந்தூர் செல்ல திமுக ஆட்சியில் ரூ.13 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.20ஆக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் பஸ் கட்டணம் ஒரு பைசாகூட உயர்த்தப்படவில்லை.

  பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, தேங்காய் எண்ணெய், மிளகு, பாமாயில் என அன்றாடம் பயன்படுத்தக் கூடிய மளிகைப் பொருள்களின் விலையும், கட்டுமானப் பொருள்களின் விலையும் அதிமுக ஆட்சியில் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

  விஷம்போல ஏறிக்கொண்டு இருக்கிற விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டுமானால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.ஜெகனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

  தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர், ஏரல், பண்டாரவிளை, செபத்தையாபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai