Enable Javscript for better performance
திருப்பூர் தொகுதியில் போட்டி: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் தொகுதியில் போட்டி: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

    By dn  |   Published on : 18th March 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    evkse

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பவானியில் அக்கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியது: மக்களவைத் தேர்தலில் தனியே போட்டியிட்டால் திருப்பூரில் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து விட்டேன்.

    காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களை பார்த்த பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றும் தொண்டர்கள் இருக்கையில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தனியே விடப்பட்டது, முடிந்து விட்டது என்று கூறுபவர்களுக்கு நமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும். வெற்றிக் கூட்டணி எனக் கூறிக் கொண்டு பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கிடையே நடக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சண்டையை நாடே பார்த்து சிரிக்கிறது.

    ராஜீவ் கொலையாளிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது. ராஜீவ் இறந்தபோது 18 தமிழர்கள் உயிரிழந்தனர். கொலையாளிகள் தமிழர்கள்.

    கொல்லப்பட்டவர்களும் தமிழர்கள்தானே? காங்கிரஸ் கட்சியின் மரியாதையைக் காக்க தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai