திருப்பூர், நெல்லைக்கு விரைவில் போலீஸ் ஆணையர்கள் நியமனம்?
By dn | Published on : 18th March 2014 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருப்பூர் மற்றும் நெல்லை மாநகரங்களுக்கு காவல் துறை ஆணையர்களை நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
திருப்பூர் மற்றும் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த இரு மக்களவைத் தொகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்றி தேர்தலை நடத்துவதற்கு காவல் துறை ஆணையர்கள் நியமிக்கப்படுவது அவசியமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, இரு மாநகரங்களுக்கும் காவல் துறை ஆணையர்களை நியமிப்பதற்கான கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பிரவீண்குமார் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அந்தக் கடிதத்தில், ஆணையாளர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.