சுடச்சுட

  

  பன்னா இஸ்மாயிலுக்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை: மனைவிக்கு அனுமதி மறுப்பு

  By dn  |   Published on : 18th March 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு திங்கள்கிழமை (மார்ச் 17) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சுமார் 3 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

  இந்து இயக்கத் தலைவர்களின் கொலை வழக்கில் போலீஸார் கைது செய்ய முயன்றபோது, ஏற்பட்ட மோதலில் குண்டுக் காயமடைந்த பன்னா இஸ்மாயிலுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  உடல் நலம் தேறிய அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டார்.

  மருத்துவமனையில் நான்கு நாள்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது உடல் அறுவை சிகிச்சைக்கு தகுதியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  அறுவை சிகிச்சையின்போது, கழிவுகள் வெளியேறுவதற்காக ஏற்கெனவே நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், இன்னும் 10 நாள்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

  அனுமதி மறுப்பு: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பன்னா இஸ்மாயிலை பார்ப்பதற்காக அவரது மனைவி ஜமீன், ஜமீனின் சகோதரி ஜபீனா, அவரது கணவர் நிவாஸ் ஆகிய 3 பேரும் ஜெயிலரின் அனுமதிக் கடிதத்துடன் மருத்துவமனைக்கு வந்தனர்.

  எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பார்ப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai