சுடச்சுட

    

    பாஜக ஆட்சிக்கு வந்தால் அதில் அதிமுக சேர்ந்து விடும்: ப. சிதம்பரம் பேச்சு

    By dn  |   Published on : 18th March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Chidamparam

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு  வந்தால், அதில் அதிமுக சேர்ந்து விடும் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:

    இது வழக்கமான மக்களவைத் தேர்தல் அல்ல, மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது யார் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும்.கடந்த 5 ஆண்டுகளில் 94 முறை தொகுதிக்கு வந்து மக்களைச் சந்தித்திருக்கிறேன். இத்தேர்தலில் பாஜக "ஏ' அணியாகவும், அதிமுக "பி' அணியாகவும் களத்தில் உள்ளன. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதை அதிமுக ஆதரிக்கும். காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி எனக் கூறிவரும் ஜெயலலிதா, தான் ஒரு ஊழல்வாதி என்பதை மறந்து விட்டார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனால், நூறு நாள் வேலைத்திட்டம் தொடருவது சந்தேகம்தான். மேலும், சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியது காங்கிரஸ் அரசுதான். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த அமைச்சகம் இருக்காது.

    எனவே, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வது யார் என்பதை மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணமிது என்றார் சிதம்பரம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai