சுடச்சுட

  
  tprchidam

  சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குக் கேட்டு திங்கள்கிழமை தனது பிரசாரத்தை ப.சிதம்பரம் துவக்கினார்.

  திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு பிள்ளையார்பட்டிக்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் வருகைதந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் செய்தார்.

  கோயில் மரியாதையை பெற்றுக்கொண்ட பின்னர் கட்சியிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான வாக்குச் சேகரிக்கும் பணியைத் துவங்கினார். இவருடன் மகன் கார்த்தி சிதம்பரமும் கலந்து கொண்டார்.

  பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: சிவகங்கை என்று சொன்னால் வட இந்தியர்கள் வரைபடத்தில் இந்தப் பகுதி எங்குள்ளது என்று கேட்பார்கள். பிள்ளையார்பட்டி என்றால் இந்தியா அறிந்த ஊர். அதனால் இங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன்

  சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருமயம் பெல் தொழிற்சாலை, சிங்கம்புணரி கயர் வாரிய தொழிற்கூடம், நறுமண தொழிற்பூங்கா, 60 கோடியில் பஞ்சாலை விரிவாக்கம், 74 புதிய வங்கிக் கிளைகள், 19 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன், 2,600 கோடி வட்டி ரத்து செய்தது, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 141 பேருக்கு 1.38 கோடி மருத்துவ உதவி ஆகியவற்றைச் செய்து கொடுத்துள்ளேன்.

  மேலும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 74 ஆயிரத்து 81 முதியோர் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியம், 29,629 இந்திரா குழும வீடுகள் கட்டிக் கொடுத்தது, சி.எஸ்.ஆர். திட்டத்தின் மூலம் 40 சமுதாயக் கூடங்கள், 15 பள்ளிக் கழிப்பறைகள், 317 கண்மாய்கள், 97 ஊரணிகள் சீர்திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

  மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதி ரூ.19 கோடியும் முழுமையாகச் செலவிடப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.

  பிள்ளையார்பட்டியில் துவங்கிய பிரசாரம் மணமேல்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, காட்டாம்பூர், எம்.புதூர், திருக்கோஷ்டியூர், ரணசிங்கபுரம், திருக்காளாப்பட்டி, தெக்கூர், மகிபாலன்பட்டி, காரையூர் உள்ளிட்ட 21 கிராமங்களில் நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai