சுடச்சுட

    

    போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? டி.கே. ரங்கராஜன் பதில்

    By dn  |   Published on : 18th March 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tkr

    மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து வேட்பாளர் பட்டியல் இறுதியான பிறகு அறிவிக்கப்படும் என்று கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்த சிறப்புப் பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் டி.கே. ரங்கராஜன் பேசியது:

    அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி முறிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தனித்து தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2-ஆக பிரிந்ததற்கு பிறகு, 2014 மக்களவைத் தேர்தலில்தான் முதல்முறையாக இரு கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தனி அணியாக தேர்தலை சந்திக்க உள்ளது.

    இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 18  தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு, அந்தந்த மக்களவைத் தொகுதியைப் பொறுத்து சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது ஏதேனும் ஒரு அமைப்புக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் டி.கே. ரங்கராஜன். இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. மோகனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நேரு, காஞ்சிபுரம் நகரச் செயலர் வாசுதேவன், உத்தரமேரூர் வட்டச் செயலர் பாஸ்கரன், காஞ்சிபுரம் வட்டச் செயலர் ஆறுமும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai