Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: டாஸ்மாக்கை முன்னதாகவே மூடக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: டாஸ்மாக்கை முன்னதாகவே மூடக் கோரிக்கை

    By dn  |   Published on : 18th March 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அதன் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த கோரிக்கை மனுவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்கள் முன்பு, அதாவது பிரசாரம் முடியும் தினத்தன்று மாலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அப்போது, தேர்தல் பிரசாரமும் உச்சக்கட்டத்தில் இருக்கும். டாஸ்மாக் கடைகளின் விற்பனையும் அதிகமாக இருக்கும்.

    அப்போது, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு கடையிலும் ஒரு விற்பனையாளரும், உதவியாளரும் மட்டுமே உள்ளனர். இதனால், கடைகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக, வழக்கமாக கடைகள் அடைக்கப்படும் நேரமான ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பதிலாக, அன்றைய தினம் காலையில் இருந்தே கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai