சுடச்சுட

  
  leftp

  வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இரண்டு இடதுசாரி கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றன.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

  அதன் விவரம்:

  வட சென்னை - உ. வாசுகி,

  கோவை - பி.ஆர். நடராஜன்,

  கன்னியாகுமரி - ஏ.வி. பெல்லார்மின்,

  மதுரை - பா. விக்ரமன்,

  திருச்சி - எஸ். ஸ்ரீதர்,

  விருதுநகர் - கே. சாமுவேல்ராஜ்,

  திண்டுக்கல் - என். பாண்டி,

  விழுப்புரம் (தனி) - ஜி. ஆனந்தன்,

  தஞ்சாவூர் - எஸ். தமிழ்ச்செல்வி.

  வேட்பாளர்களில் இருவர் பெண்கள். இருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். விருதுநகர் பொது தொகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே. சாமுவேல்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், இடதுசாரி கட்சிகள் போட்டியிடாத 22 தொகுதிகளில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மதவாதத்தின் அபாயம் குறித்தும் பிரசாரம் செய்வோம் என்றார்.

  பேட்டியின்போது மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி (வட சென்னை வேட்பாளர்), கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai