சுடச்சுட

  
  praveenkumar

  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரும், கண்காணிப்புப் படையினரும் மேற்கொண்டு வரும் சோதனைகள் மூலம் கடந்த 5-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ரூ.10 கோடியே ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 204 ரூபாய் ரொக்கமாகவும், ரூ.1 கோடி மதிப்புள்ள சேலைகள், நகைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  வாகனச் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ மூலம் படம் பிடிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு பணத்தையோ, பொருள்களையோ உரிய ஆவணங்களுடன் யாரும் கேட்கவில்லை என்றால் அவை அரசுக் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் பிரவீண்குமார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai