சுடச்சுட

  

  வாக்குக்கு பணம்: 186 பேருக்கு அபராதம்; 250-க்கும் மேற்பட்டோர் மீதான வழக்கு நிலுவை

  By dn  |   Published on : 18th March 2014 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 186 பேருக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

  மேலும், வாக்குக்கு பணம் கொடுத்து பிடிபட்ட 250-க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  கடந்த பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் அளித்து, பிடிபட்டவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அந்த அமைப்பு பெற்றுள்ளது. அதில், வாக்காளர்களுக்கு பணம் அளித்தவரின் பெயர், தண்டனை விவரம் (நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்கு இருந்தாலும் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆகியன தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பெரும்பாலான மாவட்டங்களில் குற்றம்சாட்டப்பட்ட 186 பேர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் 250-க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  என்ன தண்டனை?: வாக்குக்கு பணம் அளிப்பது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தண்டிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்குக்கு பணம் அளிப்போருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அந்த இரண்டுமே அளிக்கப்படுகின்றன.

    மேலும், தண்டனை அளிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு வாக்களிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai