சுடச்சுட

  
  duraimurukan

  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை பேசினார்.

  அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வேட்பாளர் இளங்கோ போட்டியிடுகிறார்.

  திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமை வகித்தார். நகரச் செயலர் சந்திரன் வரவேற்றார்.

  சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்  பங்கேற்று பேசியது:

  இதுவரை நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சி வேட்பாளர்கள் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்று வருகின்றனர். இத்தொகுதி திமுகவின் கோட்டை.

  அந்த வரிசையில் தற்போது நிறுத்தப்பட்டுளள திமுக வேட்பாளர் இளங்கோவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai