சுடச்சுட

  

  அதிமுக, திமுக எதையும் சாதிக்கப் போவதில்லை: ப. சிதம்பரம்

  By dn  |   Published on : 19th March 2014 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chidambaram

  அதிமுக, திமுக சார்பில் 10, 20 பேர் வெற்றி பெற்று தில்லியில் எதையும் சாதிக்கப் போவதில்லை என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியம் திருக்கட்டளை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:

  சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளோம். வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை இன்றோ நாளையோ அறிவிக்கவுள்ளது. யார் வேட்பாளராக இருந்தாலும் நானே வேட்பாளராக நின்று வாக்கு கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

  தமிழகத் தேர்தல் களத்தில் கடந்த 40 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் சண்டைக் கோழிகளாக மோதிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவர்களது சண்டை தமிழக எல்லைக்குள்ளேயே இருப்பதே நல்லது. அதையும் தாண்டி எதையும் அவர்களால் செய்ய முடியாது. தமிழகத்திலிருந்து இவ்விரு கட்சிகள் சார்பில் 10, 20 வேட்பாளர்கள் வெற்றி பெற்று சென்றால் தில்லியில் ஒன்றுமே செய்ய முடியாது.

  திமுகவும், அதிமுகவுக்கும் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது. மூன்றாவது அணியிலும் அவர்கள் இல்லை. இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஜெயலலிதா கழற்றிவிட்டு விட்டார். இதன் பிறகு தில்லியிலே போய் என்ன செய்யப் போகிறார்கள். கூச்சல் போடுவார்கள். நாடாளுமன்றத்தை முடக்குவார்கள். இதைத்தவிர பயனுள்ள காரியத்தை சாதிக்க முடியாது.

  130 ஆண்டுகள் உங்களுக்காக காங்கிரஸ் உழைத்திருக்கிறது. இந்தக் கட்சிக்கு நிறை, குறைகள் இருக்கின்றன. பல நல்ல திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம்.

  தற்போதைய தேர்தலில் பாஜக எங்களுக்குச் சவாலாக முளைத்திருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை உறுதித் திட்டத்தை தொடருவோம் என அக்கட்சியைச் சார்ந்த எவரும் கூறவில்லை. அக்கட்சியை மக்கள் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். மத்தியில் நிதித்துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை ஆகிய துறைகளில் தமிழர்களின் பங்கு பெறும் வாய்ப்புக் கிடைக்க காங்கிரஸýக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

  இதைத் தொடர்ந்து வேப்பங்குடி, வம்பன் காலனி, அரசரடிப்பட்டி, பாச்சிக்கோட்டை, கைக்குறிச்சி, மணியம்பலம் உள்பட 29 கிராமங்களில் வாக்கு சேகரித்தார் அமைச்சர் சிதம்பரம்.

  காங்கிரஸ் நிர்வாகி கார்த்திக் சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி. புஷ்பராஜ், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராமசாமி, என். சுந்தரம், வட்டாரத் தலைவர் எம். ஆசைத்தம்பி, நிர்வாகிகள் வீர. தமிழ்செல்வன். ஏ. இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai