சுடச்சுட

  
  Vaiko

  திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டமும், மாவட்டச் செயலாளர் கூட்டமும் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி பேசும்போது, "மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும். இந்த முறை மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம்பெற வேண்டும்' என்று கூறினார்.

  பின்னர் இறுதியாக வைகோ பேசியது:-

  மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும். பாஜக தனித்தே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம்பெறும் என்ற உறுதியை உங்களுக்குத் தருகிறேன்.

  பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டோம். பிறகு 9,8 என்று குறைக்கப்பட்டது. அதன்பிறகு மோடி கூறியதாக ராம்ஜெத்மலானி என்னைத் தொடர்பு கொண்டு பேசி, ஒரு தொகுதியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

  அதை நான் ஏற்றுக்கொண்டேன். 7 தொகுதிகள் உறுதியாக தருவதாகக் கூறியுள்ளனர்.

  விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தென்காசியைத் (தனி) தருவதில் மட்டும் சிக்கல் உள்ளது. விருதுநகர் தொகுதியில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச சதி செய்கிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இதற்கான வேலையை அவர் செய்து வருகிறார். அதைப்போல மு.க.ஸ்டாலினும் என்னைத் தோற்கடிக்க திட்டம் வகுத்துள்ளதாக செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார்.

  இந்தச் சதிகளைத் தகர்ப்போம். மதுரை விமான நிலையத்தில் அழகிரியைச் சந்தித்தேன். மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு அது. தேர்தலுக்குச் செலவு செய்ய போதுமான பலம் மதிமுக வேட்பாளர்களுக்கு இல்லை. எனினும் மக்கள் பலம் உள்ளது என்றார் வைகோ.

  அழகிரியுடன் சந்திப்பு?: மதுரை திருப்பரங்குன்றத்தில் மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு வைகோ தலைமை வகிக்கிறார்.

  அண்மையில் மதுரை விமானநிலையத்தில் வைகோவும் - அழகிரி சந்தித்துக் கொண்டனர். விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றிபெறுவதற்கு அழகிரி வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் மதுரை சென்று அங்கிருந்து விருதுநகர் செல்ல உள்ள வைகோ அழகிரியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai