Enable Javscript for better performance
என்.எல்.சி. துப்பாக்கிச் சூடு: கருணாநிதி கண்டனம்- Dinamani

சுடச்சுட

    
    karunanidhi

    என்.எல்.சி தொழிலாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த 35 வயது நிரம்பிய ராஜ்குமார் என்பவர் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து இரண்டாவது சுரங்கத்தின் நுழைவுவாயிலில் தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் அடித்து நொறுக்கியதில் 20 மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

    இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்ற தொó.மு.ச தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் தாக்கியுள்ளனர்.

    இதில் அவர் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாதுகாப்புக்காக வந்த போலீசாரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாகச் செய்தி வந்திருக்கிறது.

    ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச்சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்தகாகத் தகவல்கள் வரவில்லை.

    இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வன்முறைகள் ஆங்காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இவை தக்க உதாரணங்கள்.

    துப்பாக்கிச் சூட்டில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண நிதிகூட இந்த அரசினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    உடனடி அரசு நிர்வாகத்தில் இருப்போர் நெய்வேலியில் அமைதி திரும்புவதற்கும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் தமிழக அரசு முன் வரவேண்டும்.

    முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்காக ஆயிரக்கணக்கான போலீசாரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல்துறை இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத்தைக் களையவும் முன் வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai