Enable Javscript for better performance
என்.எல்.சி. துப்பாக்கிச் சூடு: சுஷீல்குமார் ஷிண்டேவுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    என்.எல்.சி. துப்பாக்கிச் சூடு: சுஷீல்குமார் ஷிண்டேவுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்

    By dn  |   Published on : 19th March 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tkrangarajan

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளரின் குடும்பத்துக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவுக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

    என்.எல்.சி. நிறுவனத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

    சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர்.

    எனவே, இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடக்காமல் தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்புப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு இழ்பபீடு வழங்க வேண்டும்.

    அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.கே. ரங்கராஜன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai