சுடச்சுட

    
    karunanidhi (3)

    திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 12 நாள்களுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதியின் சுற்றுப்பயண விவரம்:

    ஏப்.5 கோயம்புத்தூர்

     

    ஏப்.6 திருப்பூர், ஈரோடு

     

    ஏப்.7 சேலம்

     

    ஏப்.10 பாண்டிச்சேரி, மரக்காணம், கடலூர், சிதம்பரம்

     

    ஏப்.11 மயிலாடுதுறை, திருவாரூர்

     

    ஏப்.12 தஞ்சாவூர், திருச்சி

     

    ஏப்.13 துவரங்குறிச்சி, மதுரை

     

    ஏப்.16 ஸ்ரீபெரும்புதூர், வேலூர்

     

    ஏப்.17 காஞ்சிபுரம்

     

    ஏப்.19 திருவள்ளூர், வடசென்னை

     

    ஏப்.20 தென் சென்னை

     

    ஏப்.21 மத்திய சென்னை

    திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    திமுக உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் கருணாநிதி, ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். சாலை மார்க்கமாகவே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்கிறார்.

    தென்மாவட்டங்களில் மதுரையோடு நிறுத்திக்கொள்ளும் கருணாநிதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai