சுடச்சுட

  
  paruthi

  மக்களவைத் தேர்தலில், நட்சத்திரப் பேச்சாளராக களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பாடல் மூலம் முதல்வரை வாழ்த்தியும், அதிமுகவுக்கு வாக்குக் கேட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  திமுகவில் 2-ம் கட்டத் தலைவர்களில் முன்னணியில் இருந்தவர்களில் பரிதி இளம்வழுதியும் ஒருவர். சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

  தற்போது அவர் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு வாக்குச் சேகரிக்கும் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். பிரசாரத்தின்போது, நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், எனக்கு சுதந்திரம் கிடைத்து 6 மாதம்தான் ஆகின்றது. திமுகவில் வஞ்சிக்கப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, வேதனைப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளாகி அடிமைப்பட்டுக் கிடந்த எனக்கு முதல்வர் ஜெயலலிதான் ஆறுதல் கூறி, சுதந்திரம் கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

  அவர், திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

  அத்தோடு, திருவாரூரில் இருந்து பயணச்சீட்டு எடுக்க வழியில்லாமல் சென்னைக்கு வந்த கருணாநிதி, இன்றைக்கு உலகப் பணக்காரர் வரிசையில் குடும்பத்தை கொண்டு சென்றுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எங்கெங்கு எத்தனை கோடி மதிப்பில் சொத்துகள் குவிந்துள்ளன, என்னென்ன தொழில் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டும் வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai