சுடச்சுட

  

  தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க பாஜகவுக்கு வாக்கு: விஜயகாந்த் பிரசாரம்

  By dn  |   Published on : 19th March 2014 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijayakanth_campaign

  நாட்டில் நல்லாட்சி அமையவும் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கவும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமென உதகையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

  பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக உதகையில், சுதந்திர தின சதுக்கத்தில் தேமுதிக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

  ஊழலை ஒழிக்க தேசிய அளவில் தகுதி வாய்ந்தவர் நரேந்திர மோடிதான். தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதனால்தான் கூட்டணிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுகிறோம்.

  படகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, உதகையில் அரசு பொறியியல் கல்லூரி அமைப்பது, சுற்றுலா வளர்ச்சிக்காக கேபிள் கார் திட்டம், ஹெலிகாப்டர் சேவை என எதையாவது இதுவரை ஆட்சி செய்தவர்கள் நிறைவேற்றியுள்ளனரா? வாக்குகளுக்காக மக்களை மட்டும் இரு கட்சியினரும் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். பசுந்தேயிலைக்கு ஆதார விலை, தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி என எதையும் நிறைவேற்றவில்லை.

  தேமுதிகவின் இலக்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதற்காக இப்போதே போராட்டத்தை தொடங்க வேண்டும். முதல்கட்டமாக வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு முழு வெற்றி கிடைக்க பாடுபடவேண்டும். காவல் துறையினர் சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழக மக்கள் சுபிட்சமாக வாழவே இப்போராட்டத்தை தொடங்கியுள்ளேன். இதில், மோடியின் தலைமையில் நல்லாட்சி அமைப்பதுதான் இலக்கு என்றார்.

   

  "நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாது'

  மலைகளின் அரசி எனப்படும் நீலகிரியை ஸ்பெக்ட்ரம் ராசாவும், ஜெயலலிதாவும் இரண்டாகவே பிரித்துவிட்டனர். இதனால், உதகை ஊழலின் உச்சத்தில் உள்ளது. காமராஜரைப் போலவே அவரது சீடரான கக்கனும் எளிமையாக வாழ்ந்தவர். ஆனால், கருணாநிதியைப் போல அவரது சீடர் ராசாவும் ஊழல்வாதியாக வாழ்கிறார்.

  மற்ற கட்சிக்காரர்கள் கதை சொல்வார்கள். எனக்கு கதை விடத் தெரியாது. மற்றவர்களைப் போல நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கவும் தெரியாது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் மக்கள் விரோத சக்திகள். எனவே, நாட்டில் நல்லாட்சி அமைய மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai