தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
By dn | Published on : 19th March 2014 03:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தென் தமிழகத்தில் ஆங்காங்கே புதன்கிழமை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இலங்கைக்கு அருகே வந்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் புதன்கிழமை ஆங்காங்கே லேசான மழை பெய்யும். இது வலுவடைய வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.