சுடச்சுட

    
    jaya_trbalu

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பிரச்னை தற்போது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக 2011 ஆம் ஆண்டு தமிழக அரசுடன் பன்னாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

    இந்தத் திட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த பிரச்னை இப்போது தேர்தல் பிரசாரத்திலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

    திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளோம் என்றார். மேலும், இத்திட்டம் வந்தால் மக்களுடன் நானும் போராடத் தயார் என பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாலு கூறினார்.

    நாகை மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வரும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். இதேபோல, தஞ்சாவூர் தொகுதியில் அதிமுகவினர் மேற்கொள்ளும் பிரசாரத்திலும் இந்தக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai