சுடச்சுட

    

    பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: "மோடம்' வாடகைக் கட்டணம் உயர்வு

    By dn  |   Published on : 19th March 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பி.எஸ்.என்.எல். பிராட்பேண்டுக்கான "மோடத்தின்' மாதாந்திர வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பி.எஸ்.என்.எல் (சென்னை) வெளியிட்ட செய்தி:

    பிராட்பேண்டுக்கான வை-ஃபை மற்றும் சாதாரண "மோடத்தின்' வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. "மோடத்திற்கு' முதல் ஆண்டு வாடகை மற்றும் அதற்கு பிறகான வாடகை என இரு விதமான கட்டணங்கள் இதற்கு முன்பு வசூலிக்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த கட்டணங்கள் சற்று அதிகரிக்கப்பட்டு ஒரே வாடகை முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரம்:

    மோடம் வகை புதிய கட்டணம்

    ஏ.டி.எஸ்.எல் பேசிக் - 70

    ஏ.டி.எஸ்.எல் வை-ஃபை - 110

    ஏ.டி.எஸ்.எல் வை-ஃபை டி.ஏ - 130

    வி.டி.எஸ்.எல் வை-ஃபை - 150

    ஐ.எஸ்.டி.என். ஃபேன்சி எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். ஐ.எஸ்.டி.என். ஃபேன்சி எண்களுக்கான ஆன்-லைன் ஏலம் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கியது. 2999 9999 என்ற எண்ணும் 2000 2000 முதல் 2000 2099 வரை உள்ள எண்களும் ஏலம் விடப்பட உள்ளன. மார்ச் 31-ஆம் தேதி வரை ஆன்-லைன் ஏலம் நடைபெறும். இதற்கான ஏலத் தொகை மற்றும் கூடுதல் விவரங்கள் ட்ற்ற்ல்//:ஜ்ஜ்ஜ்.ங்ஹன்ஸ்ரீற்ண்ர்ய்.க்ஷள்ய்ப்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai