சுடச்சுட

    

    பெருந்துறை, சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் விஷ வாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

    பெருந்துறை, சிப்காட் தொழில் வளாகத்தில், கே.பி.ஆர்.மில் நிறுவனம் உள்ளது. அதில், செவ்வாய்க்கிழமை சாயக் கழிவுகள் தேங்கும் தொட்டியில் உள்ள பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய ஆனந்த், பீர்பகதூர் ஆகிய தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர்.

    மோட்டாரை சரி செய்ய, அதன் பைப்பை அவர்கள் கழற்றியபோது, பைப்பில் தேங்கி இருந்த விஷ வாயு வெளியேறியதாக தெரிகிறது. அதை சுவாசித்த ஆனந்த், பீர்பகதூர் இருவரும் மயங்கி விழுந்தனர்.

    அப்போது தொட்டியின் மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள், இருவருக்கும் எலக்ட்ரிக் ஷாக் அடித்து விழுந்து விட்டதாக நினைத்து, மின் இணைப்பை துண்டித்துவிட்டு, தொட்டிக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

    இதையடுத்து, தொட்டிக்குள் இறங்கிய 16 பேரும் மயங்கி விழுந்துள்ளனர்.

    உடனடியாக மயங்கி விழுந்த அனைவரையும் நிறுவனத்தினர் மீட்டு, பெருந்துறையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

    செல்லும் வழியிலேயே விருத்தாசலத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் சசிகுமார் (22), ஈங்கூரைச் சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (34), சென்னிமலையைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் மதன் (21), நாகராஜன் மகன் சுதாகர் (28), கவுந்தப்பாடியைச் சேர்ந்த பெருமாள் கவுண்டர் மகன் ஆனந்த் (35), நேபாளத்தைச் சேர்ந்த பீர்பகதூர் (32), ஜுபாசக்தி (20) ஆகிய 7 பேரும் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடியை அடுத்த, ராயபுரத்தைச் சேர்ந்த ஜான்தனசிங் மகன் ஜோன்ஸ் (31), கவுந்தப்பாடி புதூரை அடுத்த வள்ளலார் நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் பூபதிராஜா (30), நேபாளத்தைச் சேர்ந்த ஹாலுபாபு மகன் ரமேஷ் (25), ஓமலூரை அடுத்த பெரியபட்டியைச் சேர்ந்த கணபதி மகன் பூபதி (25), பெருந்துறையை அடுத்த வாய்க்கால் மேட்டைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஞானசேகரன் ( 44), பவானியை அடுத்த சித்தாரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ் (28), கவுந்தப்பாடியை அடுத்த குட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயகருப்பன் (32), எடப்பாடியை அடுத்த மொரசபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் போர்மன்னன் (30), வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புதுமனைதெரு புதூரைச் சேர்ந்த சாமுவேல் மகன் யோபு (23) ஆகிய 9 பேரும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

    இச்சம்பவம் குறித்து, சென்னிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.

    சம்பவ இடத்தை ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai