மதுரையில் ஸ்டாலின் அவசர ஆலோசனை
By dn | Published on : 19th March 2014 01:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மதுரை விமான நிலையத்தில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருடன் அவசர ஆலோசனை நடத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
திமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரி, மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பற்றி, திங்கள்கிழமை நடந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு, திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக வேட்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம் (தேனி), வ.வேலுசாமி (மதுரை), எஸ்.ரத்தினவேல் (விருதுநகர்), முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மதுரை மாநகர திமுக பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, மாவட்ட செயலர் பி.மூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர் காசிநாதன் உடன் இருந்தனர்.
தொகுதி நிலவரம் பற்றி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி பிரசாரத்துக்கு மதுரை வரவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு தெரிவித்துள்ளார்.