சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, தேர்தல் ஆணையம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மனு அளித்தனர்.

  இந்த மனுவின் அடிப்படையில், சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.கார்த்திக் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கப்பதற்கான வசதிகளைச் செய்வதற்கான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.

  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளுக்கு வீல்சேர் வசதி செய்து தருவது, மாற்றுத் திறனாளிகள் வரும் வாகனத்தை வாக்குச்சாவடியின் நுழைவு வாயில் வரையிலும், சக்கர நாற்காலிகளை வாக்கு இயந்திரம் வரையிலும் அனுமதிக்கவும் ஆணையத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும், வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கண்ணியமாக நடத்த வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai