சுடச்சுட

  
  ship

  இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவில் இருந்து நாய்கி தேவி ரோந்துக் கப்பல் செவ்வாய்க்கிழமை விடைபெற்றது.

  இதேபோல, அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அக்கா தேவி கப்பலுக்கும் விடை அளிக்கப்பட்டது.

  இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நாய்கி தேவி கப்பல் தனது 24 ஆண்டுகால பணிக் காலத்தை முடித்துக் கொண்டதால் அந்தக் கப்பலுக்கு செவ்வாய்க்கிழமை விடை கொடுக்கப்பட்டது.

  இதேபோல, அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த அக்காதேவி கப்பலுக்கும் விடை அளிக்கப்பட்டது. இதனால், இரண்டு கப்பல்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

  கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரியான சத்திய பிரகாஷ் சர்மா தலைமையில் அதிகாரிகள் கப்பலுக்கு மரியாதை செலுத்தி விடை அளித்தனர். சூரியன் மறைந்த நேரமான மாலை 6.28 மணிக்கு இரண்டு கப்பல்களில் இருந்தும் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டன.

  கடலோரக் காவல் படையில் இருந்து விடைபெற்ற நாய்கி தேவி கப்பலுக்குப் பதிலாக அபிராஜ் என்ற அதிநவீன கப்பல் தூத்துக்குடி பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. நாய்கி தேவியின் பணியை அபிராஜ் கப்பல் தொடரும் என கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai