சுடச்சுட

    
    g_ramakrishnan

    பெருந்துறையில் 7 பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வந்த கே.பி.ஆர். மில்லில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதே மில்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று 2 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போது அதேபோன்று 7 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.

    இந்நிறுவனத்தின் உரிமையாளர் மீது தமிழக அரசு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

    இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 நபர்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க முன் வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai