சுடச்சுட

  

  தமிழகத்தில் 20 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்-கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இந்தப் பணியில் கல்லூரி மாணவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  வெப்-கேமிரா இயக்குதல், அவற்றை பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமார் 20 வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளை வெப்-கேமிரா மூலமும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு: வாக்குச்சாவடிகளில் வெப்-கேமிரா பொருத்துவது, அவற்றை கம்ப்யூட்டர் மூலம் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், இந்த நிறுவனங்களுக்கு உதவிடும் வகையிலும், வாக்குச்சாவடிகளில் விரைந்து பணிகளைச் செய்யவும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  ஊடகத் தொடர்பு மற்றும் கேமிரா குறித்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்களுடன் தேர்தல் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் இணைந்து செயல்படுவார்கள். இதற்கான உரிய பயிற்சி தேர்தல் ஆணையத்தின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

  சி.டி. பெற நடவடிக்கை: தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரையில் அனைத்து நடவடிக்கைளும் வெப்-கேமிரா மூலம் பதிவு செய்யப்படுவதால், வாக்குப்பதிவில் ஏதேனும் சர்ச்சையைக் கிளப்பினால் கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெளிவாகத் தெரிந்து விடும்.

  மேலும், வாக்குப்பதிவின்போது தேவையான காட்சிகள் மற்றும் நடவடிக்கைகளை குறுந்தகடாக (சி.டி.,) பெறும் வசதி கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது நடைமுறையில் இருந்தது. இந்த வசதி இந்தத் தேர்தலிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai