சுடச்சுட

  

  அமைச்சர் சம்பத் மீதான புகார்: விசாரிக்க கடலூர் ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

  By dn  |   Published on : 20th March 2014 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமைச்சர் சம்பத் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிர்லோஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

  தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக திமுக தலைமைக் கழகத்தின் வழக்குரைஞர் ஐ.பரந்தாமன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான பிரவீண்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தார். புகைப்படத்துடன் கூடிய இந்த புகார் மனு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  அதன் நிலை குறித்து, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரவீண்குமார் கூறியது:

  வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிர்லோஷ்குமாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவது விசாரணையில் உறுதி செய்யப்படும்போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர் விஷயத்தில் என்ன நடந்தது என்பது மாவட்ட தேர்தல் அதிகாரியின் விசாரணை அறிக்கைக்குப் பிறகே தெரியும் என்றார் பிரவீண்குமார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai