Enable Javscript for better performance
உள்ளடி வேலை மிரளும் தலைகள்!- Dinamani

சுடச்சுட

  

  இந்தத் தேர்தலில் உள்ளடி சதி தொடர்பான முதல் புகார் வைகோவிடம் இருந்து வந்துள்ளது. அதுவும் பெரும் புகாராக வந்துள்ளது.

  விருதுநகர் தொகுதியில் நான் (வைகோ) தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ராஜபட்சவும், ஸ்டாலினும் சதி செய்கின்றனர் என்று வைகோ அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரக்கப் பேசியுள்ளார்.

  தேர்தல் பிரசாரத்தின் மூலம் ஒருவரை தோற்கடிப்பது நல்லாட்டம். எதிர் வேட்பாளரின் பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, வளைத்து ஒருவரைத் தோற்கடிப்பது கல்லாட்டம் என்று தேர்தலில் இரண்டு எளிய விதிகள்தான் உள்ளன.

  இதில் பெரும்பாலும் கல்லாட்டத்துக்கே முதல் மரியாதை கொடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது.

  வைகோ சொல்லும் குற்றச்சாட்டு கட்சிகளைக் கடந்ததாகும். இதைவிட கூட்டணிக் கட்சிக்காரர்களாலும், சொந்தக் கட்சிக்காரர்களாலும் நடைபெறும் உள்ளடி வேலைகளே பல வேட்பாளர்களின் காலை வாரிவிடக்கூடிய சூழல் அதிகம் உள்ளது. தஞ்சாவூரில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு நிறுத்தப்பட்டுள்ளார். அவர் எதிர்ப்பு நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பழநிமாணிக்கம் உள்ளார். சீட்டுக் கிடைக்காத கோபம் அவருக்கு உண்டு.

  எனினும் இருவரும் பரஸ்பரம் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சி அரங்கேறியது. கருணாநிதியும் இந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்ததாகத் தெரிவித்தார்.

  ஆனால் இருவருடையே பிரச்னை இன்னும் நீர்பூத்த நெருப்பாகத்தான் உள்ளது.

  கடந்த வாரம் தஞ்சாவூரின் மாவட்ட நிர்வாகிகளுக்கு டி.ஆர்.பாலு சால்வை அணிவிக்க முற்பட்டுள்ளார். அதற்கு பழநிமாணிக்கம் தடை கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட விவாதத்தில் தஞ்சாவூரில் பிறந்து சென்னையின் மாவட்டச் செயலாளராக இருந்தவன் நான், என்னிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று டி.ஆர்.பாலு சூடாகக் கூறியுள்ளார். பகை தொடருகிறது.

  விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கன்னியாகுமரியின் திமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்போம் என்று மு.க.அழகிரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். வேலூர் தொகுதியை துரைமுருகன் அவர் மகனுக்குக் கேட்டார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கே மீண்டும் கொடுக்கப்பட்டது. இதில் ஆத்திரம் கொண்டு,

  துரைமுருகனின் ஆதரவாளர்கள் முஸ்லிம் லீக் வேட்பாளரின் காரை அடித்து நொறுக்கினர். அவர் தேர்தல் பயத்தில் உள்ளார். திருவள்ளூர் தொகுதியில் திமுகவில்

  கோஷ்டிப் பூசல் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அணி திரளுகிறது.

  உள்ளடி வேலை தொடர்பாக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினால், என்னைப் பார்த்து, இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறாய், என்பதுதான் முதல் கேள்வியாக

  இருக்கிறது.

  அதை மீறி வரும் பதில்கள்:-

  வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதால் மட்டும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், எல்லா வேட்பாளர்களும் பணம் கொடுக்கத்

  தயாராக இருக்கின்றனர். வாக்காளர்களைவிட எதிர்கட்சிகளின் பூத் ஏஜென்டுகளை வளைப்பதே தேர்தலில் வெற்றிபெற முதன்மையாக செய்ய வேண்டிய காரியம்.

  பூத் ஏஜென்டை வளைப்பதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தர கட்சிகள் தயாராக இருக்கின்றன. காலை நேரத்தில் கவனத்துடன் இருந்துவிட்டு, மதிய நேரத்திலும்

  கோட்டை விட்டால் போதும் என்று ஏஜென்டுகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. தேர்தல் நாளன்று கட்சிக்காரர்கள், காவல்துறையினர் என அனைவரும் அயர்ந்துபோகும்

  நேரம் மதியம் 1 மணியிலிருந்து 3 மணி வரை ஆகும். இந்த நேரத்தையே பூத் ஏஜென்டுகள் பயன்படுத்திக் கொள்வார்கள். பூத் ஏஜென்டுகளின் சொந்த பிரச்னைகளையும்

  தங்களுக்கு சாதகமாக எதிர்க் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முற்படும் என்று கூறுகின்றனர். இதனாலே பூத் ஏஜென்டுகளாக நியமிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகப்

  பார்த்துப் பார்த்து கட்சிகள் போடுகின்றன. அதையும் மீறியே பணத்தைக் கொடுத்து பூத் ஏஜென்டுகள் வளைக்கப்படுகின்றனர்

  கொள்கைகளுக்காக கட்சிப் பக்கம் நிற்பவர்கள் இப்போது குறைவு என்பது ஒரு காரணம். பாமக நிறுவனர் ராமதாஸ், பூத் ஏஜென்டாக செயல்படும் சொந்தக் கட்சிக்

  காரர்களுக்குக்கூட பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி வருபவர்.

  தேர்தல் பணிக்காக கட்சிக்காரனுக்கு எதற்கு காசு கொடுக்க வேண்டும் என்பது ராமதாஸின் இலக்கணம். பூத் ஏஜென்டாக வருகிறவர்களும் இந்த இலக்கணத்தைப் படிக்க

  வேண்டும். அப்படிப் படிக்க பலரும் தயாராக இல்லாததாலேயே உள்ளடி வேலைகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai