சுடச்சுட

  
  rangaswamy

  கூட்டணியில் பாமக தொடருமா என்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.

  புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை மாலை திறந்து வைத்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனும் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். கட்சி அலுவலகத்திலுள்ள சுவாமி படங்களுக்கு முதல்வர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து வழிபட்டார். அதன்பின்னர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

  பிரசாரத்தை விரைவில் தொடங்க உள்ளோம். புதுச்சேரி வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ அதை வலியுறுத்துவோம். எங்களுக்கு பாஜக மீது நம்பிக்கை உள்ளது. எங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவர்.

  புதுச்சேரியில் பாமக தொகுதி ஒதுக்கீடு பிரச்னை சுமுகமாக முடியும். அவர்களுடன் பாஜகவினர் பேசி வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல அனைவரும் பாடுபடுவோம் என்றார்.

   

  முதல்முறை வந்த வேட்பாளர்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராதாகிருஷ்ணன், முதல்முறையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். கட்சியினர் அவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

  இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தற்போது கட்சியினர் அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன். பிரசாரம் தொடர்பாகவும், எதை முன்வைத்து பிரசாரம் என்பதையும் முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றார்.

   

  இடம்பிடித்த மோடி: கட்சி அலுவலக பேனரில் ரங்கசாமியுடன் மோடியின் படம் முதல்முறையாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai