சுடச்சுட

  

  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் பிரசாரக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பரூன்குமார் கூறினார்.

  ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை பெருங்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

  இதில் ஜெ. பிரபாகர் (மத்திய சென்னை), சதிஷ்குமார் (சேலம்), குமாரசாமி (ஈரோடு), சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன் (திருப்பூர்), பொன். சந்திரன் (கோவை), ரங்கராஜன் (புதுச்சேரி) ஆகிய 6 வேட்பாளர்களை டேவிட் பரூன்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

  ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார் (கன்னியாகுமரி), புஷ்பராயன் (துத்துக்குடி), ஜோசுராஜ் (திருநெல்வேலி) ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. ஆனால், அவர்கள் பற்றிய விவரங்கள் விடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்டன.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் பரூன்குமார், ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 2-வது பட்டியலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் மாத இறுதியில் வெளியாக உள்ளது. அதன் பிறகு தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தமிழகத்தில் பிரசாரம் செய்ய கட்சியின் தேசியத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai