சுடச்சுட

  

  தமிழக நலன் காக்கப்பட நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ புதன்கிழமை கூறினார்.

  விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய நிறைவுரை: பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மார்ச் 20) அறிவிப்பார். விருதுநகர் மக்களவைத் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும்.

  அதிமுக, திமுக அல்லாத மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைந்திருப்பது புதிய திருப்பம். மக்களவைத் தேர்தலில் இதுவரை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடனே தேசியக் கட்சிகள் மாறிமாறி கூட்டணி அமைத்துள்ளன. அவற்றில் ஒரு கட்சியின் மீதான கோபமே மற்றொரு கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது. மக்களின் எதிர்மறை எண்ணமே திமுக, அதிமுகவுக்கு சாதமாகியிருந்தது. வேறு கட்சியை ஆதரித்தால், வாக்குகள் சிதறிவிடும் என மக்கள் நினைத்தனர். இந்த எண்ணமே திமுக, அதிமுக கூட்டணிக்கு சாதகமானது. அதன்படி, மத்தியில் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த கட்சிகளுடன் திமுக, அதிமுக கட்சிகள் மாறிமாறி கூட்டணி அமைத்தன.

  ஆனால், தற்போது பாஜக கூட்டணி புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. நாட்டை வழிநடத்திடும் சுயநலமற்ற, தொலைநோக்குச் சிந்தனை உள்ள தலைவராக நரேந்திர மோடி கருதப்படுகிறார்.

  திமுக, அதிமுகவுக்கு பண பலம், வாக்கு வங்கி இருக்கலாம். ஆனால், பாஜக கூட்டணியானது யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெறும். தற்போது நாட்டில் மோடி அலைவீசுகிறது.

  இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமான, தமிழக உரிமைகள் பறிக்கப்பட காரணமான காங்கிரஸ் அரசு மத்தியில் அகற்றப்பட வேண்டும். நரேந்திர மோடியும் மதச்சார்பற்ற கொள்கையுடன், மாநில சுயசார்பைக் காத்து, ஒடுக்கப்பட்டோர் உரிமையைக் காப்பார்.

  குஜராத் வதோதரா நகரில் அமைதிப் பேரணி நிறைவில் எனது பேச்சை அப்போதும் முதல்வராக இருந்த மோடிதான் மொழிபெயர்த்தார். ஆகவே தமிழக, தமிழர் நலன் காக்கப்பட பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai