Enable Javscript for better performance
திருக்கடையூர் கோயிலில் செப்புத் தகடுகள், நாணயங்கள் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருக்கடையூர் கோயிலில் செப்புத் தகடுகள், நாணயங்கள் கண்டெடுப்பு

    By dn  |   Published on : 20th March 2014 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் புதன்கிழமை கோயில் கட்டுமானப் பணியின் போது செப்பு தகடுகள், செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

    திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனுறை அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் மண்டபம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், புதன்கிழமை கட்டுமானப் பணிக்காக குழிதோண்டிய போது உடைந்த நிலையில் பெரிய மண்பாண்டமும் அதனுள் சில பொருள்களும் இருந்தன.

    அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது 15 செ.மீ. நீல அகலத்தில் சதுர வடிவிலான செப்பு தகடுகள் அதிக அளவில் இருந்தன. இவற்றின் மொத்த எடை அளவு சுமார் 90 கிலோ.

    மேலும் 65 செப்பு நாணயங்கள், சிதிலமடைந்த நிலையில் செம்பினாலான கவசம், பூஜைக்கான சில பொருள்களும் இருந்தன.

    கண்டெடுக்கப்பட்ட பொருள்களை தரங்கம்பாடி வட்டாட்சியர் த. அழகர்சாமி, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் டி. தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டனர். உரிய ஆய்வுக்குப் பின்னரே இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்புத் தகடுகளில் எழுத்துக்கள் எதுவும் பொறிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. ஐம்பொன் சிலை செய்வதற்கான தாது பொருளாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது. நாணயங்களில் எழுத்துக்கள் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.

    கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai