சுடச்சுட

    

    வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தென்தமிழகத்தின் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 20) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று அண்மையில் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த தாழ்வு நிலை தற்போது வலுவிழந்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக  தென்தமிழகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 20) மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai