சுடச்சுட

    

    "தேர்தலில் யார் சீட் தருகிறார்களோ அவர்களை வாழ்த்துவார் கிருஷ்ணசாமி'

    By dn  |   Published on : 20th March 2014 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் யார் சீட் தருகிறார்களோ அவர்களை வாழ்த்திப் பேசுவது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாடிக்கை என்றார் முதல்வர் ஜெயலலிதா.

    சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது: திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது குடும்பத்தினரின் நலம் முக்கியம். அதுபோலவே, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியும் தன் நலத்துக்காகச் செயல்படக் கூடியவர்.

    2011, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் புதிய தமிழகம் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றி பெற்றது. எம்எல்ஏவாக வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவையில் 30.8.2011-ல் பேசுகையில், தமிழர் நலனுக்காகப் பாடுபடுவதாக கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகக் குறிப்பிட்டு, கருணாநிதியின் தமிழர் விரோதப் போக்கை விமர்சித்துப் பேசினார். மேலும், தமிழ்மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் பாடுபடும் ஒரே முதல்வர் ஜெயலலிதா என்று புகழ்ந்து பேசினார். இப்போது, மக்களவைத் தேர்தலில் திமுகவில் சீட் கிடைத்ததால் அங்கு சென்று கருணாநிதியையும், திமுகவையும் வாழ்த்திப் பேசுகிறார். யார் சீட் தருகிறார்களோ அவர்களை வாழ்த்திப் பேசுவதுதான் கிருஷ்ணசாமியின் வாடிக்கை. அவருக்கு தன் நலம்தான் முக்கியம். தன்னலக் கொள்கையுள்ள கிருஷ்ணசாமிதான், தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்களித்து ஏமாறக் கூடாது. அதிமுக வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும். தென்காசி மட்டுமல்லாது 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்து மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai