சுடச்சுட

    

    பத்தாம் வகுப்புத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்

    By dn  |   Published on : 20th March 2014 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

    இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும்.

    ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே இவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai