சுடச்சுட

    

    "பாஜக அணியில் இடம் பெறுவதை பாமகதான் தீர்மானிக்க வேண்டும்

    By dn  |   Published on : 20th March 2014 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    muralidararao

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பாமக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக மேலிடத்தின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளையும், வேட்பாளர்களையும் இறுதி செய்வதற்காக அக் கட்சியின் தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோர் புதன்கிழமை பகலில் தில்லி வந்தனர். அவர்கள் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் மூலம் கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் வழங்கினர். அதில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் பட்டியலுக்குத் தேர்தல் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் கூறியது:

    "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறும் தமிழகக் கட்சிகள் அடங்கிய அணியை முறைப்படி அறிவிக்க தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை நண்பகலில் சென்னை செல்கிறார். அங்கு கூட்டணியில் சேரவுள்ள தலைவர்களை சந்தித்து கூட்டணிக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெறுவது குறித்து அக் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அக் கட்சி இடம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மு.க. அழகிரி மிகச் சிறந்த மனிதர், தமிழகத்தில் முக்கியத் தலைவர். அவர் உள்பட அனைவரிடமும் நரேந்திர மோடி பிரதமராக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி வருகிறோம்' என்றார் முரளிதர ராவ்.

    இந் நிலையில், வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடத்திடம் ஒப்படைத்த பிறகு, ராதாகிருஷ்ணனும் இல. கணேசனும் மாலையில் சென்னை புறப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai