சுடச்சுட

  

  டாக்டர் கே.காமராஜ் (சென்னை)

  தொகுதி மக்களின் பிரச்னைகளை அரசுக்கு முறையாக தெரியப்படுத்தி மருத்துவம், வேலை வாய்ப்பு உள்பட அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு பாடுபடக் கூடிய வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறேன்.

   

  நோட்டா குறித்து

  நன்றாகத் தெரியும்.

   

  சௌந்தரராஜன்,

  (ஆலோசகர், கோயம்பேடு மார்க்கெட்)

  சமூக ஆர்வலராகவும், தொகுதியின் வளர்ச்சிக்காக மக்களுடன் ஓருங்கிணைந்து பணியாற்றும் வேட்பாளருக்கே இந்த முறை எனது ஓட்டு.

   

  நோட்டாவை வரவேற்கிறேன்.

   

   

  ராஜ்குமார்,

  தனியார் நிறுவன ஊழியர் (சென்னை)

  இப்போது உள்ள தேசிய, மாநில கட்சிகளின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. யாருடைய ஆட்சியும் திருப்திகரமாக இல்லை எனவே நோட்டாவுக்கு எனது ஓட்டு.

   

  நோட்டாவை கண்டிப்பாக பயன்படுத்துவேன்.

   

   

  ஏ. தனபால்,

  (சலவைத் தொழிலாளி, காஞ்சிபுரம்)

  தேசிய கட்சிகளைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. மக்களவைத் தேர்தல் நடப்பது தெரியும். எப்போதுமே இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவேன். இந்த முறையும் எனது ஓட்டு அதிமுகவுக்கே.

   

  நோட்டா குறித்து எதுவும் தெரியாது.

   

   

  ஆர். மீனாட்சி

  (துணிக்கடை ஊழியர், காஞ்சிபுரம்)

  எப்போதுமே எங்களது குடும்ப ஓட்டு தி.மு.க.வுக்குத்தான். அந்த வகையில் இந்த முறையும் தி.மு.க.வுக்குத்தான் ஓட்டு போடுவேன்.

   

  நோட்டா குறித்தும்

  எதுவும் தெரியாது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai