சுடச்சுட

  

  வாக்குப் பதிவு நேரம் மாற்றம்: காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்

  By dn  |   Published on : 20th March 2014 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். இதுவரை வாக்குப்பதிவு, வழக்கமாக காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

  இந்த நிலையில், இப்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி அதிகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  வாக்குப் பதிவுக்கான நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 56-ஆவது பிரிவு வழங்கியுள்ளது. அதன்படி, எட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் வாக்குப் பதிவு நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு வாக்குப் பதிவினை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த முடிவின் மூலம், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் பேரவை இடைத் தேர்தல் ஆகியவற்றில் அதிகளவு வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உதவும் என்று பிரவீண்குமார் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai