சுடச்சுட

    

    விலைவாசி உயர்வுக்கு அதிமுகவே காரணம்: கருணாநிதி குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 20th March 2014 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு அதிமுக அரசே காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    திமுகவின் தேர்தல் அறிக்கையில், நுகர்பொருள்களின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளோம்.

    மேலும், வாங்கும் சக்தி குறைவாக உள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளோம்.

    ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.

    அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் எட்டாத உயரத்துக்குச் சென்றுள்ளன. கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

    அதன் காரணமாக கட்டுமானத் தொழில் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.

    ஆனால், விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறி ஜெயலலிதா தப்பிக்கப் பார்க்கிறார்.

    விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்றால், தமிழகத்தில் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதற்கு யார் காரணம்?

    அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 2011-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அவையில் வைப்பதற்கு முன்பாகவே, தமிழக மக்கள் தலையில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு வரிகளை ஜெயலலிதா சுமத்தினார்.

    திமுக ஆட்சி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது.

    இருப்பினும், தமிழக மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சுமைகளை திமுக அரசு தாங்கிக் கொண்டது. ஆனால் அதிமுக, மக்கள் தலையில் சுமத்திவிட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai