Enable Javscript for better performance
விவசாயிகளின் பிரச்னைகள் தீர மோடி பிரதமராக வேண்டும்: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் பிரச்னைகள் தீர மோடி பிரதமராக வேண்டும்: விஜயகாந்த்

    By dn  |   Published on : 20th March 2014 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakanth

    விவசாயிகளின் பிரச்னைகள் தீர நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

    தேசிய ஜனநாயக் கூட்டணியை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை பேசியது:

    பொள்ளாச்சி தென்னை மரங்கள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. தற்போது, தென்னையில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு எங்கு பார்த்தாலும் மரங்கள் காய்ந்து வருகின்றன. இங்குள்ள திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகள் தூர்வாரப்படாததால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக தலைமையிலான இரு அரசுகளுமே இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொப்பரைத் தேங்காய்க்கு கட்டுப்படியான விலையும் வழங்கப்படவில்லை.

    கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், ரசாயனக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழக விவசாயப் பகுதிகளை மலடாக்கும் செயல்கள், தமிழகத்தில் இருந்து மணல் உள்ளிட்ட கனிம வளங்களை கேரளத்துக்குக் கடத்தி தமிழகத்தை வறட்சிப் பகுதியாக மாற்றியதை மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விவசாயம் செய்யும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். தேசிய நதிநீர் இணைப்பை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முன்வராமல் உள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் விவசாயிகளின் பிரச்னைகள் தீர வேண்டுமானால் மக்கள் நலனுக்காகப் போராடும் பாஜகவின் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai