சுடச்சுட

  
  engine_trrial

  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உருவாக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்ட உதகை மலைரயிலின் 4-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

  மேட்டுப்பாளையம்-உதகை மலைரயில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மலைரயிலின் இயக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமெரிக்காவிலுள்ள யுனெஸ்கோ நிறுவனம் இந்த மலைரயிலை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்து, உலக புராதன சின்னமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்த மலைரயிலில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  இதையடுத்து சுற்றுலா பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ. 40 கோடி மதிப்பில் 4 புதிய மலைரயில் என்ஜின்களை உருவாக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் இந்திய பொறியாளர்களின் உதவியுடன் 3 என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

  தற்போது 4-வது புதிய என்ஜின் தயாரிக்கப்பட்டு, கடந்த வாரம் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. அதனுடன் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, புதன்கிழமை (மார்ச் 19) காலை 10.20 மணியளவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயிலில் பொன்மலை ரயில்வே பணிமனை பொறியாளர்களும், ரயில்வே ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த ரயில் கல்லாறு சென்றடைந்தபின் பிரத்யேக பல்சக்கர இணைப்பின் மூலம் பயணம் செய்து, 11 மணியளவில் ஹடர்லி ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் பகல் 12.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு 1.30 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது.

  இதில் ஒவ்வொரு கட்டத்திலும், என்ஜினின் உந்துவிசை மற்றும் இழுவைத்திறனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  இதையடுத்து மீண்டும் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai