சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக 5 பேர்சஸ்பெண்ட் செய்ய்பபட்டனர்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்துக்குச் சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை மூட்டைகளாகக் கட்டி லாரியில் ஏற்றிச் செல்லும் பணியில் பல்கலைக்கழக அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூட்டைகளில் அளவுக்கு அதிகமாக நெல்லை பிடித்து ஏற்றி விற்பனைக்கு அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவரின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் விவசாய பண்ணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (48), துணை கண்காணிப்பாளர் கோபால்ராமலிங்கம், மேஸ்திரிகள் கலைச்செல்வன் (50), அருள் (50), முருகன் (40) ஆகிய 5 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் தாற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai