சுடச்சுட

  
  anbumani

  அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் தடுப்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதில் பங்கேற்ற அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:

  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு காணவும் பாஜக உறுதி அளித்துள்ளது.

  மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுக, திமுக காரணமாக தமிழகம் மோசமான நிலையை அடைந்துள்ளது. இரு திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

  பாமக தனித்துப் போட்டியிட்டால் ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும். இதனைத் தடுப்பதற்காகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்

  என்றார் அன்புமணி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai