சுடச்சுட

    
    accident

    கலசப்பாக்கம் அருகே வேலூர்-திருவண்ணாமலை சாலையில் வட கருங்காலிப்பாடி என்ற இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் வியாழக்கிழமை இறந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பானந்தல் தாலுகா, திருவாய்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஞானசேகரன் (26). இவர் கும்பகோணத்திலிருந்து மதனபள்ளிக்குச் சென்று தக்காளி லோடு ஏற்றி வருவதற்காக திருவண்ணாமலை வழியாக வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே இருசக்கர வாகனம் ஒன்றில் போளூர் தாலுகா பாப்பாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரது மகன் தேசிங்கு (29), இவருடைய நண்பர் எழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சரவணன் (44) ஆகியோரும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஜோசப் (49) என்பவரும் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் வட கருங்காலிப்பாடி என்ற இடத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனங்களின் மீதும் மோதி விட்டு மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனங்களில் சென்ற மூன்று பேரும், லாரி ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கலசப்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி விபத்துக்குள்ளான இடத்துக்கு முன்பு சிறிது தூரத்தில் உள்ள கடையில் லாரி ஓட்டுநர் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு லாரி ஓட்டி வந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai